நிதி ஆயோக் அமைப்பானது 15 நாட்கள் அளவிலான ‘ஜல் உத்சவ்’ பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
நீர் மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை குறித்த விழிப்புணர்வு மற்றும் உணர்திறனை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது வீடுகளில் முறையான நீர்ப் பயன்பாடு மற்றும் பயன்பாட்டு சார் அமைப்புகள் மற்றும் முகமைகளில் நீர் மேலாண்மை ஆகியவற்றினைப் பற்றிய பொறுப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறது.