TNPSC Thervupettagam

ஜல் ஜீவன் திட்டத்தின் இலக்கு

October 17 , 2022 644 days 549 0
  • 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு மற்றும் இரண்டாம் காலாண்டிற்கான ஜல் ஜீவன் திட்ட இலக்கை எட்டிய ஒரே மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.
  • ஜல் ஜீவன் என்ற திட்டமானது, 2024 ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்திற்கும் உறுதியான குடிநீர் குழாய் நீர் விநியோகத்தை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் குழாய் இணைப்புகளைக் கொண்ட குடும்பங்களின் சதவீதம் (55.63%) ஆனது 53.96% என்ற தேசிய சராசரியைவிட அதிகமாக உள்ளது.
  • தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராமங்களில், 2,663 கிராமங்களை ‘ஹர் கர் ஜல்’ வகை கிராமங்களாக மாநில அரசு அறிவித்துள்ளது.
  • இவை அனைத்து வீடுகளிலும் குழாய் நீர் இணைப்புகளைக் கொண்ட கிராமங்கள் ஆகும்.
  • இந்த மாநிலத்தில் உள்ள 85% பள்ளிகளில் குடிநீர் வசதி வழங்கப் பட்டுள்ளது.
  • இங்கு 83 சதவீதத்திற்கும் அதிகமான அங்கன்வாடிகளில் குடிநீர் வசதி வழங்கப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்