TNPSC Thervupettagam

ஜவுளித் துறையின் திறன் கட்டுமானத் திட்டம்

December 23 , 2017 2576 days 841 0
  • 2017-18 முதல் 2019-20 ஆண்டு காலத்திற்கான ஜவுளித் துறையின் திறன் கட்டுமானத் திட்டம் (Scheme for Capacity Building in Textile Sector) எனும் புதிய திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • முறைசார் தொழிற் துறையின் (Organised Sector) நூற்பு (spinning) மற்றும் நெசவு (weaving) பிரிவைத் தவிர ஜவுளித் துறையின் பிற அனைத்து பிரிவுகளின் முழுமதிப்புச் சங்கிலியும் (Valur Chain)  இத்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படும்.
  • இதனால் அதிக பணியாளர்கள் செறிவுடைய ஜவுளித் துறைக்கு திறனுடைய மனித ஆற்றல் (Skilled Manpower) அளிப்பு உறுதி செய்யப்படும்.
  • மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தால் அறிவிக்கப் பெறும் பொது விதிகளின் படி நிதியளிக்கும் கூறுகளோடு, திறன் மேம்பாட்டு பயிற்சியுடன் ஒத்திசைந்த தேசிய திறன் மேம்பாட்டு தகுதி கட்டமைப்பை இத்திட்டம் (National Skill Qualification Frame work) கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்