TNPSC Thervupettagam

ஜவ்வாது மலையின் மேற்பகுதியில் பெருங்கற்காலக் கல்லறை

March 28 , 2024 241 days 475 0
  • திருவண்ணாமலையில் உள்ள ஜவ்வாது மலையில் அமைந்த பட்டரகடு காப்புக்காடு பகுதியில் (RF) 100க்கும் மேற்பட்ட பெருங்கற்காலக் கல்லறைகளைத் தமிழக அரசின் தொல்லியல் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
  • இறந்தவர்கள் பயன்படுத்திய பொருள்கள் உட்பட எந்தப் பொருட்களும் கிடைக்க வில்லை என்பதால், இந்தப் பெருங்கற்கால கல்லறைகளில் மிகப் பெரும்பாலானவை நினைவுச் சின்னக் குத்துக்கல்லாக (கற்திட்டைகள்) உள்ளன.
  • ஒவ்வொரு கற்திட்டையும் சராசரியாக 7.5 மீட்டர் விட்டம் மற்றும் 1.5 மீட்டர் உயரம் கொண்டது.
  • பெரிய கிரானைட் கற்களால் ஆன பெரும்பாலான கற்திட்டைகள் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் அமைந்துள்ளன.
  • எந்தப் பொருட்களும் கிடைக்கப்பெறாத இதே போன்ற பெருங்கற்கால கற்திட்டைகள் ஆனது மல்லச்சந்திரம் (கிருஷ்ணகிரி) மற்றும் கோயம்புத்தூர் பகுதியிலும் கண்டறியப் பட்டுள்ளன.
  • பெரிய நினைவுச் சின்னக் கல் என்பது ஒரு வரலாற்றுக்கு முந்தைய காலகட்ட அமைப்பு அல்லது நினைவுச் சின்னத்தை தனித்தனியாகவோ அல்லது மற்ற கற்களுடன் ஒன்றாகவோ சேர்த்து உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு பெரிய கல் ஆகும்.
  • இத்தகைய தளங்கள் பெட்டக வடிவிலான கல்லறைகள் (டால்மெனாய்டு கல்பதுக்கை) போன்ற உண்மையான கல்லறைகள் அல்லது வெறும் நினைவுச் சின்னக் குத்துக்கல் போன்ற நினைவுத் தளங்கள் என இரண்டு வகைகளாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்