TNPSC Thervupettagam

ஜஸ்பிரித் பும்ரா - உலகச் சாதனை

July 7 , 2022 743 days 392 0
  • இந்தியக் கிரிக்கெட் அணித் தலைவர் ஜஸ்பிரித் பும்ரா 35 ரன்கள் எடுத்து, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு ஓவரில் அதிகபட்ச ரன்களை எடுத்த வீரர் என்ற உலக சாதனையைப் படைத்தார்.
  • இவர் இங்கிலாந்தின் ஸ்டுவர்ட் பிராட் என்பவரின் பந்து வீச்சில் ஆடி 29 ஓட்டங்கள் எடுத்ததுடன் 6 ஓட்டங்கள் உபரி என்ற வகையில் கூடுதலாக எடுத்து இந்தச் சாதனையைப் படைத்தார்.
  • இதன் மூலம், இவர் மேற்கிந்தியத் தீவுகளின் பிரையன் லாராவின் சாதனையை ஒரு ரன் வித்தியாசத்தில் முறியடித்தார்.
  • லாரா, 2003-04 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் எடுத்து, தென்னாப்பிரிக்காவின் ராபின் பீட்டர்சனின் சாதனையை முறியடித்தார்.
  • முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஜார்ஜ் பெய்லியும் 28 ரன்கள் எடுத்து சாதனை ஒன்றைப் படைத்திருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்