பலமு புலிகள் வளங்காப்பகத்தில் (PTR) கௌர் என்று வெகு பிரபலமாக அறியப்படும் காட்டெருதுகளின் குறைந்து வரும் எண்ணிக்கையை திரும்பவும் அதிகரிப்பதற்காக ஜார்க்கண்ட் வனத்துறையானது ஓர் ஆய்வைத் தொடங்கியுள்ளது.
சுமார் 50-70 காட்டெருமைகள் மட்டுமே எஞ்சியுள்ள PTR தவிர, ஜார்க்கண்ட் மாநிலம் முழுவதும் காட்டெருதுகளின் எண்ணிக்கை ஏற்கனவே அழிந்துவிட்டது.
சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையிலான வளர்ப்புக் கால்நடைகள் காட்டெருதுகளின் வாழ்விடத்தை ஆக்கிரமித்துள்ளன.
காட்டெருதுகள் என்பவை இந்தியாவில் காணப்படுகின்ற வனவாழ் கால்நடைகளில் மற்றும் தற்போதுள்ள மிகப்பெரிய மாடு இனங்களில் மிக உயரமான இனமாகும்.
உலகளவில் காணப்படும் காட்டெருதுகளின் எண்ணிக்கையில் தோராயமாக சுமார் 85% இந்தியாவில் காணப்படுகின்றன.
அவை IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.