TNPSC Thervupettagam

ஜார்க்கண்ட் மாநில வாசிகள் மசோதா

December 25 , 2023 373 days 253 0
  • 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து, இரண்டு முறை திருப்பி அனுப்பப்பட்ட ‘ஜார்க்கண்ட் மாநில வாசிகள் மசோதாவிற்கு’ ஜார்க்கண்ட் மாநில சட்டசபை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது உள்ளூர் வாசிகள் என்பதை வரையறுப்பதற்கான ‘நிலப் பதிவேடுகளுக்கான சான்றுக்கான’  வரம்பு நிலை ஆண்டாக 1932 ஆம் ஆண்டினை நிர்ணயிக்கிறது.
  • இந்த மசோதாவின் கீழ், 1932 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு அல்லது  காதியன் என்ற ஆவணம் அல்லது அதற்கு முன்பான கணக்கெடுப்பில் ஒருவரின் பெயர் அல்லது மூதாதையர்களின் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தால், அவர் உள்ளூர் வாசி என்று அழைக்கப்படுவார்.
  • நிலமற்ற நபர்களைப் பொறுத்தவரையில், அவர்களின் கலாச்சாரம், உள்ளூர் பழக்க வழக்கங்கள் மற்றும் பாரம்பரியம் போன்றவற்றின் அடிப்படையில் அதன் கிராம சபைகளால் உள்ளூர் வாசிகளாக அடையாளம் காணப்படுவார்கள்.
  • இதே போன்ற கொள்கை 2002 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது, ஆனால் அது நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்