ஏப்ரல் 13 ம் தேதி ஜாலியன்வாலா பாக் படுகொலை தினமானது பஞ்சாபின் ஜாலியன்வாலா பாக்கில் 1919 ஆம் ஆண்டு நடந்த அமிர்தசரஸ் படுகொலை நினைவாக அனுசரிக்கப்படுகிறது.
அனைத்துப் பக்கங்களிலும் சுவரால் சூழப்பட்டு 7 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் பிரபலமான பொதுப் பூங்காவான ஜாலியன்வாலா பாக்கின் பெயரினை இது கொண்டுள்ளது.
சத்யபால் மற்றும் சாய்புதீன் கிச்லு ஆகிய இரு தேசியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதையும் அவர்கள் நாடு கடத்தப்பட்டதையும் கண்டித்து ஒரு அமைதியான போராட்டத்திற்காக மக்கள் இங்கு ஒன்று திரண்டிருந்தனர்.
கர்னல் ரெஜினால்டு டயரின் கட்டுப்பாட்டின் கீழிருந்த ஆங்கிலேய இந்திய ராணுவத்தினர் இந்த இந்தியர்கள் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
ஆங்கிலேயர்களின் அதிகாரப்பூர்வ விசாரணையின் போது 379 மரணங்கள் என தெரிவித்திருந்த போதிலும் இறப்பின் எண்ணிக்கையானது சுமார் 1000 என்ற அளவில் காங்கிரஸால் கூறப்பட்டது.
2019 ஆம் ஆண்டானது இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் கருப்பு நிகழ்வான இதன் நூறாவது ஆண்டாகும்.
மேலும், 100 வது ஆண்டினை நினைவுகூறும் வகையில் அஞ்சல் தலையையும் ஒரு நாணயத்தையும் இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் வெளியிட்டார்.