TNPSC Thervupettagam

ஜாலியன் வாலாபாக் படுகொலை மற்றும் சர் சங்கரன் நாயர்

April 20 , 2025 3 days 63 0
  • ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 106வது ஆண்டு நினைவு விழாவில் பெரும் தேசியவாதியும் சட்ட வல்லுநருமான சர் செட்டூர் சங்கரன் நாயர் அவர்களை இந்தியப் பிரதமர் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தினார்.
  • 1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு சர் சங்கரன் மீது வழக்குத் தொடர்ந்த மூத்தப் பிரிட்டிஷ் அதிகாரிக்கு எதிராக நாயர் ஒரு புகழ்பெற்ற நீதிமன்றப் போராட்டத்தை நடத்தினார்.
  • 1897 ஆம் ஆண்டில், அவர் இந்திய தேசிய காங்கிரஸின் இளம் தலைவரானார்.
  • 1908 ஆம் ஆண்டில், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப் பட்டார்.
  • அவரது மிகவும் பிரபலமான தீர்ப்புகள் சமூகச் சீர்திருத்தங்களுக்கான அவரது பெரும் உறுதிப்பாட்டை நன்கு சுட்டிக் காட்டின என்பதோடு புதாஸ்னா மற்றும் பாத்திமா (1914) இடையிலான வழக்கில், இந்து மதத்திற்கு மாறியவர்களைச் சாதியிலிருந்து விலக்கப் பட்டவர்களாகக் கருத முடியாது என்றும் அவர் தீர்ப்பளித்தார் என்பதோடு மேலும் சில வழக்குகளில், சாதிக் கலப்பு மற்றும் மதக் கலப்பு திருமணங்களை அவர் ஆதரித்தார்.
  • 1919 ஆம் ஆண்டில், மாகாணங்களில் இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்திய மற்றும் மற்றும் நிர்வாகத்தில் இந்தியர்களின் பங்களிப்பை அதிகரித்த மாண்டெகு-செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்களில் உள்ள விதிகளை விரிவுபடுத்துவதில் அவர் மிக முக்கியப் பங்கு வகித்தார்.
  • ஜாலியன் வாலாபாக் படுகொலையைத் தொடர்ந்து, அவர் அரசப் பிரதிநிதியின் சபையில் இருந்து ராஜினாமா செய்தார்.
  • 1922 ஆம் ஆண்டில், நாயர் காந்தி மற்றும் அராஜகம் (Gandhi and Anarchy) என்ற ஒரு புத்தகத்தினை வெளியிட்டார் என்பதோடு அதில் அவர் காந்தியின் அகிம்சை, சட்ட மறுப்பு இயக்கம் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தின் சில முறைகள் குறித்த தனது கடும் விமர்சனத்தினை விவரித்தார்.
  • அப்படுகொலை நடைபெற்ற சமயத்தில் பஞ்சாபின் துணை நிலை ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ'டயர், பல உயிர்களின் மரணங்களுக்கு வழி வகுத்த கொள்கைகளைப் பின்பற்றியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
  • பிரிட்டிஷ் நீதிமன்றமானது தனக்கு ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்த்து, ஓ'டயர் இங்கிலாந்தில் நாயர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
  • வழக்கின் முடிவில், நாயர் 500 பவுண்டுகள் மற்றும் விசாரணைக்கான செலவுகளை வாதிக்கு செலுத்த உத்தரவிடப்பட்டது.
  • நாயர் மன்னிப்பு கேட்டால் அபராதத்தைக் கை விடுவதாக ஓ'ட்வயர் கூறினார், ஆனால் நாயர் அதனை மறுத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்