அண்மையில் தேசிய வைராலஜி நிறுவனத்தின் (National Institute of Virology-NIV) ஓர் ஆய்வானது டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய்களுக்கான வைரஸ்களை பரப்பும் இந்தியன் ஏடிஸ்எஜிப்தி கொசுக்களானது (Indian Aedesaegypti mosquito) ஜிகா வைரஸினால் (zika virus) எளிதில் பாதிக்கப்படவல்லன என கண்டறிந்துள்ளது.
தேசிய வைராலஜி நிறுவனத்தின் ஆய்வின் போது, ஜிகா வைரஸின் MR-766 எனும் ஆப்பிரிக்கன் மரபுக் கூறினால் (African strain) பாதிக்கப்பட்ட இந்தியன் ஏஜிஸ்எஜிப்டி கொசுவானது நோய் தொற்றை எளிதாக பரப்ப வல்லது என கண்டறியப்பட்டுள்ளது.
ஜிகா வைரஸானது ஏந்திகள் வழியே பரவக்கூடிய நோய்களில் (vector borne disease) ஒன்றாகும். ஏஜிஸ் எஜிப்தி கொசுக்களால் ஜிகா வைரஸானது முதன்மையாக பரப்பப்படுகின்றது.
பாலுறவு தொடர்பு (sexual contact) மற்றும் இரத்தப் பரிமாற்றம் (blood transfusion) மூலமும் ஜிகா வைரஸ் பரவக்கூடியது. மோசமான பிறப்பு குறைபாடுகளை (serious birth defects ) இந்த ஜிகா வைரஸ் ஏற்படுத்த வல்லது.
ஜிகா வைரஸின் முதல் வெளிப்பாடானது (Zika Virus outbreak) முதன் முதலில் 2013 ஆம் ஆண்டு தென் பசுபிக் பெருங்கடலில் உள்ள மார்குயிசஸ் தீவில் (Marquesas Islands) கண்டறியப்பட்டது. பின்னர் அது 2015 ஆம் ஆண்டில் பிரேசிலுக்குப் பரவியது.