TNPSC Thervupettagam

ஜிங்க் பற்றாக்குறை

April 18 , 2019 1920 days 623 0
  • காற்றில் அதிகரித்து வரும் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவானது இந்தியப் பயிர்களில் ஜிங்க் பற்றாக்குறைக்கு காரணமாக உள்ளது. இதனால் இந்தியர்களால் உட்கொள்ளப்படும் ஊட்டச்சத்து அளவானது குறைந்து கொண்டிருக்கின்றது.
  • ஹார்வர்டு T H சன் பொதுச் சுகாதாரப் பள்ளியினால் நடத்தப்பட்ட ஆய்வின்படி இந்தியாவில் அரிசி முக்கிய உணவாக உள்ள பகுதிகளில் வாழும் மக்களின் தினசரி உணவில் ஜிங்க் எடுத்துக் கொள்வதில் பற்றாக்குறை உள்ளது என்பதைக் காட்டுகின்றது.
  • பற்றாக்குறையாக ஜிங்க் எடுத்துக் கொள்ளுதலின் தேசிய விகிதமானது 1983 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட கால கட்டத்தில் 17 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
  • ஜிங்க் பற்றாக்குறையானது பொதுவாகக் குழந்தைகளில் மலேரியா, வயிற்றுப் போக்கு உபாதைகள், நிமோனியா போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்