TNPSC Thervupettagam
December 6 , 2018 2053 days 617 0
  • தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு விண்வெளித் தளமான கவ்ரோவில் இருந்து “பிக் பேர்டு” என்றழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO - Indian Space Research Organisation) ஜிசாட்-11 செயற்கைக் கோளானது விண்வெளியில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
  • தந்தி வடத்திலான இணையச் சேவை அளிக்கப்படாத பின்தங்கிய பகுதிகளுக்கு செயற்கைக் கோள் மூலம் இணையத்தை வழங்க இது உதவும்.
  • இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விண்வெளியின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இச்செயற்கைக் கோளானது 5854 கிலோ எடையைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் மிக அதிக எடையுள்ள செயற்கைக் கோளாகும்.
  • ஜிசாட்-11 ஆனது இந்தியாவால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட அனைத்து தொலைத் தொடர்பு செயற்கைக் கோள்களின் ஒட்டுமொத்த ஆற்றலுக்கு இணையானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்