TNPSC Thervupettagam
June 25 , 2022 888 days 684 0
  • நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனமானது GSAT-24 என்ற செயற்கைக்கோளினை விண்ணில் ஏவியது.
  • முழு செயற்கைக்கோளின் திறனையும் நேரடியாக ஒளிபரப்பு (DTH) சேவை வழங்கும் ஒரு நிறுவமான டாட்டா பிளே என்ற நிறுவனத்திடம் குத்தகைக்கு வழங்குவது போன்ற விண்வெளி சார்ந்த சீர்திருத்தங்களைத் தொடர்ந்து இது ஏவப் பட்டது.
  • இது அந்நிறுவனத்தின் முதல் "தேவையின் பேரில் உருவாக்கப்பட்டு ஏவப்பட்ட" தகவல் தொடர்பு செயற்கைக் கோள் ஆகும்.
  • இந்தச் செயற்கைக்கோளானது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்காக உருவாக்கப்பட்ட செயற்கைக் கோள் ஆகும்.
  • இது பிரெஞ்ச் கயானாவில் உள்ள கௌரோவ் எனுமிடத்திலிருந்து ஏரியன் 5 ராக்கெட் (தென் அமெரிக்கா) மூலம் புவிநிலைச் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்