TNPSC Thervupettagam

ஜிப்ஸ் கழுகுகள் - மோயார் பள்ளத்தாக்கு

April 6 , 2024 232 days 393 0
  • தீபகற்ப இந்தியாவின் காடுகளில் ஜிப்ஸ் கழுகுகளின் மிகப்பெரிய கூடு கட்டும் பகுதி அமைந்த ஒரே பகுதி இதுவாகும்.
  • மோயார் பள்ளத்தாக்கு அல்லது மாயார் (புலப்படாத ஆறு) பள்ளத்தாக்கு கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகத்தின் முக்கியப் பகுதி வழியாக நீண்டுள்ளது.
  • சுமார் 85 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த முழுப் பகுதியும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் உள்ள வனவிலங்குகளின் புகலிடமாகவும் ஒரு மிக முக்கிய உயிரியல் பகுதியாகவும் உள்ளது.
  • இது புலி மற்றும் யானை மற்றும் மிகவும் அருகி வரும் இனமான ஜிப்ஸ் கழுகு போன்ற பல முக்கிய உயிரினங்களுக்கான வாழ்விடங்களை அளிக்கிறது.
  • மற்ற தென் மாநிலங்கள் எதுவும் இந்தப் பறவைகளுக்கு இவ்வளவு ஏதுவான இனப் பெருக்க இடம் உருவாக்கப்படவில்லை.
  • இது மேற்கில் வயநாடு வனவிலங்கு சரணாலயம் (கேரளா), வடக்கே பந்திப்பூர் புலிகள் வளங்காப்பகம் (கர்நாடகம்), தெற்கு மற்றும் கிழக்கில் நீலகிரி வடக்குப் பிரிவு மற்றும் தென்மேற்கில் கூடலூர் வனப் பிரிவு ஆகியவற்றுடன் ஒரு பொதுவான எல்லையைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்