TNPSC Thervupettagam

ஜிம்பாப்வேயில் யானைகளை கொல்லும் திட்டம்

September 24 , 2024 60 days 151 0
  • ஜிம்பாப்வே கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கான மோசமான வறட்சிக்குப் பிறகு மிகவும் கடுமையானப் பட்டினி நிலையினை எதிர்கொள்ளும் சமூகங்களுக்கு உணவளிப்பதற்காக 200 யானைகளை கொல்ல திட்டமிட்டுள்ளது.
  • எல் நினோ நிகழ்வினால் தூண்டப்பட்ட இந்த வறட்சி ஆனது தென்னாப்பிரிக்காவில் பயிர்களை அழித்து, 68 மில்லியன் மக்களை பாதித்தது மற்றும் பிராந்தியம் முழுவதும் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தியது.
  • இந்த நடவடிக்கையானது 1988 ஆம் ஆண்டிற்குப் பிறகு நாட்டில் முதன்முறையாக, ஹ்வாங்கே, எம்பைர், ஷோலோட்ஷோ மற்றும் சிரெட்ஸி மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
  • அண்டை நாடான நமீபியாவும் கடந்த மாதம் 83 யானைகளை கொன்று, வறட்சியால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு இறைச்சியை வழங்க முடிவு செய்தது.
  • ஜிம்பாப்வே, ஸாம்பியா, போட்ஸ்வானா, அங்கோலா மற்றும் நமீபியா ஆகிய ஐந்து தென்னாப்பிரிக்க நாடுகளில் பரவியுள்ள வளங்காப்பு பகுதியில் சுமார் 200,000க்கும் மேற்பட்ட யானைகள் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • ஜிம்பாப்வே நாட்டில் 84,000 யானைகள் உள்ளன.
  • ஜிம்பாப்வே நாடு சுமார் 600 மில்லியன் டாலர் மதிப்பிலான விற்பனை செய்ய முடியாத  தந்த இருப்பினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்