மும்பையைச் சேர்ந்த 13 வயது சிறுமியான ஜியாராய், வெறும் 13 மணி நேரம், 10 நிமிடங்களில் பாக் நீர்ச் சந்தியை கடந்த இளம் நபர் என்ற ஒரு சாதனையைப் படைத்துள்ளார்.
இவர் வெற்றிகரமாக 29 கி.மீ. தொலைவைக் கடந்துள்ளார்.
இதற்கு முன்பாக, புலா சௌத்ரி என்பவர் 13 மணி நேரம், 52 நிமிடங்களில் பாக் நீர்ச் சந்தியைக் கடந்து சாதனையைப் படைத்திருந்தார்.