TNPSC Thervupettagam

ஜி20 வரலாற்றுக் கடன் ஒப்பந்தம்

November 18 , 2020 1384 days 604 0
  • கோவிட்டால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்கு உதவ ஒரு வரலாற்றுக் கடன் ஒப்பந்தத்தை ஜி20 அமைப்பானது ஏற்படுத்தி இருக்கிறது.
  • அரசாங்கக் கடனை மறுசீரமைப்பதற்கான பொதுவான அணுகுமுறைக்கு ஜி20 ஒப்புக் கொண்டது இதுவே முதல் முறையாகும்.
  • இதற்கான காரணம் கோவிட் நெருக்கடியானது ஏழை நாடுகளைத் தான் வாங்கிய கடனைத் திருப்பித் தர இயலாத நிலைக்குத் தள்ளக் கூடும் என்பதாகும்.
  • இதன் செயல்பாட்டை அமெரிக்கா கண்காணிக்கும்.
  • 2019 ஆம் ஆண்டில் ஜி20 நாடுகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய ஒட்டு மொத்தக் கடனில் 63% அளவினை சீனா கொண்டு இருந்தது.
  • கோவிட் காலத்தில், வாங்கிய கடனைத் தர இயலாத விளிம்பு நிலையில் உள்ள முதல் நாடாக ஆப்பிரிக்காவின் ஜாம்பியா உள்ளது.
  • இந்தத் திட்டம் பாரிஸ் கிளப் என்ற குழுவால் நிறுவப்பட்ட விதிகளிலிருந்து பெரிதும் கடன் விதிமுறைகளைப் பெற்றுள்ளது.

பாரிஸ் கிளப் குழு

  • இது 1956 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இது பாரிஸில் மாதாந்திர அடிப்படையில் சந்திக்கும் ஒரு முறைசாராக் குழுவாகும்.
  • இது கடனாளி நாடுகள் எதிர்கொள்ளும் கட்டணச் சிக்கல்களுக்குத் சாத்தியமான தீர்வுகளைக் காண்கிறது.
  • இதில் 19 உறுப்பு நாடுகள் உள்ளன.
  • அவற்றில் பெரும்பாலானவை ஸ்காண்டிநேவிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கியப் பேரரசு போன்ற நாடுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்