ஜீனிபர் கோப்ரா என்பது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ராணுவப் படைகளுக்கு இடையேயான இருதரப்பு கூட்டுப் போர் பயிற்சியாகும்.
வழக்கமான போர் பயிற்சிகளின் ஒரு பகுதியாக நடத்தப்படும் இக்கூட்டுப் போர் பயிற்சி, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைவை அதிகரிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிராந்திய அச்சுறுத்தல்களை எதிர்ப்பதற்கு ஒருங்கிணைந்த கண்டங்களுக்கிடையேயான ஏவுகணை பாதுகாப்பை (integrated ballistic missile defense) இஸ்ரேலுக்கு வழங்குவதும், இஸ்ரேலுடைய இராணுவ செயல்பாடுகளுக்கு அமெரிக்க ஆதரவைப் பராமரிப்பதும் இக்கூட்டுப் போர் பயிற்சியின் முக்கிய நோக்கங்களாகும்.