TNPSC Thervupettagam

ஜீனோம் இந்தியா திட்டத்தின் தரவு மாநாடு

January 31 , 2025 23 days 87 0
  • பிரதமர் தலைமையில், இந்திய மரபணுத் தரவுத் தொகுப்பு ஆனது வெளியிடப்பட்டது, இதன்படி இந்தியா இனி வெளிநாட்டு மரபணு தரவுகளைச் சார்ந்திருக்காது.
  • மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ‘Framework for Exchange of Data Protocols - தரவு நெறிமுறைகள் பரிமாற்றத்திற்கான கட்டமைப்பு (FeED)’ மற்றும் இந்திய உயிரியல் தரவு மையம் (IBDC) ஆகிய இணையதளங்களைத் தொடங்கி வைத்தார்.
  • இது இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு 10,000 முழுமையான மரபணு மாதிரிகளை அணுக வாய்ப்பளிக்கிறது.
  • இது உயிரித் தொழில்நுட்பத் துறையின் (DBT) கீழான 'ஜீனோம்இந்தியா' திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
  • இந்தியாவின் மரபணு பன்முகத்தன்மையின் மிக வலுவான மற்றும் விரிவான தரவுத் தளத்தினை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
  • எனவே, இந்தியாவில் உணவு, கலாச்சாரம் மற்றும் புவியியல் ஆகியவற்றில் மட்டும் அல்லாது, மரபணுவிலும் பன்முகத்தன்மை உள்ளது.
  • 2014 ஆம் ஆண்டில் சுமார் 10 பில்லியன் டாலர்களாக இருந்த இந்தியாவின் உயிரியல் பொருளாதாரம் ஆனது 2024 ஆம் ஆண்டில் 130 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது, என்ற நிலையில் இது 2030 ஆம் ஆண்டிற்குள் 300 பில்லியன் டாலர்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • உயிரித் தொழில்நுட்பத்தில் இந்தியா தற்போது உலகளவில் 12வது இடத்திலும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் 3வது இடத்திலும் உள்ளது.
  • இந்தியாவானது உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராகவும், மூன்றாவது பெரியப் புத்தொழில் நிறுவனச் சூழல் அமைப்பாகவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்