TNPSC Thervupettagam

ஜீபூ மரபணுத்தொகுதி மற்றும் இனப்பெருக்க உடன்படிக்கை

August 31 , 2017 2690 days 945 0
  • பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு , இந்தியா மற்றும் பிரேசில் இடையேயான ஜீபூ கால்நடை மரபணுத்தொகுதி (Zebu Cattle Genomics) மற்றும் இனப்பெருக்க ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையினை உறுதி செய்துள்ளது.
  • அக்டோபர் மாதம் 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • ஜீபூ மாடுகள்
  • ஜீபூ (Bos primigenius indicus or Bos indicus or Bos taurus indicus) என்பவை இந்தியத் துணைக் கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட உள்நாட்டு மாடு இனங்கள் ஆகும்.
  • சிந்து சமவெளி நாகரிகத்தின் போது , சிந்து நதிப் படுகையில் இவ்வகை மாடுகள் உருவாகின என்று வரலாறு குறிக்கின்றது.
  • ஜீபூ மாடுகள் கொழுத்த திமில்களையும், பெரிய அசைத் தாடைகளையும் (dewlap) கொண்டிருக்கும். காதுகள் தொங்கிய நிலையில் தோற்றமளிக்கும் இந்த ஜீபூ மாடுகள் அதிக வெப்ப நிலைகளைத் தாங்ககூடியவை ஆகும். இவை பெருமளவில் வெப்பமண்டல நாடுகளில் வளர்க்கப்படுகின்றன.
  • ஜீபூ மாடுகள் உழவு மாடுகளாகவும், பால் மாடுகளாகவும், மாட்டு இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகின்றன.
  • டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் , 1999 ஆம் ஆண்டு ஜீபூ மாடு ஒன்றினைக் குளோனிங் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்