ஓடிசாவில் ஜெஜ்பூரின் ஜுவாங் பழங்குடியினர் நாட்டின் ஐந்தாவது மற்றும் அந்த மாநிலத்தில் 2006 ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் (FRA) கீழ் வாழிட உரிமைகளைப் பெற்ற இரண்டாவது PVTG குழுவினராக மாறியுள்ளனர்.
இந்த உரிமைகளானது ஜுவாங்ஸ் அவர்களின் மூதாதையர் நிலம் மற்றும் வளங்களை தடையின்றி அணுகல் மற்றும் சட்ட அங்கீகாரத்தினை வழங்கும்.
பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பிற மரபு சார் வனவாசிகள் 2006 ஆம் ஆண்டு (வன உரிமைகள் அங்கீகாரம்) சட்டத்தின் 3(1) (e) பிரிவின் கீழ் PVTG பிரிவினர்களுக்கு வாழ்விட உரிமைகள் வழங்கப் படுகின்றன.
ஜெஜ்பூரின் சுகிந்தா தொகுதிக்கு உட்பட்ட 13 கிராமங்களில் ஜுவாங் பழங்குடியினர் வசிக்கின்றனர்.