வரலாற்றில் "மிகப்பெரிய" ஜூமூர் நடன நிகழ்வு ஆனது அசாமில் நடைபெற்றது.
2025 ஆம் ஆண்டில், அசாம் மாநிலத்தின் தேயிலைத் தொழில் துறையின் 200வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஜூமோயர் பினாண்டினி என்னுமிடத்தில் சுமார் 8,600 நடனக் கலைஞர்கள் இந்த நிகழ்வினை நிகழ்த்தினர்.
இங்கு "tea tribe-தேயிலை பழங்குடி" என்ற ஒரு சொல் ஆனது தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் சந்ததியினரின் பல கலாச்சார, பல இனம் சார் சமூகத்தைக் குறிக்கிறது.
இந்த மக்கள் மத்திய இந்தியாவிலிருந்து, 19 ஆம் நூற்றாண்டில் அசாமில் குடியேறி ஆங்கிலேயர்கள் அமைத்து வந்த தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்தனர்.
அவர்கள் பெரும்பாலும் இன்றைய ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.