மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான மேற்கு வங்காளத்தின் ஜூலன் கோஸ்வாமி அனைத்து வகையானப் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துளார்.
அவர் 204 ஆட்டங்களில் 255 விக்கெட்டுகளுடன் அவர் தனது விளையாட்டுத் துறை வாழ்க்கையை நிறைவு செய்தார்.
இது ஒருநாள் மகளிர் போட்டியில் இவர் மேற்கொண்ட சாதனையாகும்.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அவரது விளையாட்டுத் துறை வாழ்க்கை நீள்கிறது.
பெண்கள் சர்வதேச கிரிக்கெட் துறையில் மிக நீண்ட காலம் பங்கேற்ற இரண்டாவது பெண்மணி இவர் ஆவார்.
அவர் 12 டெஸ்ட் போட்டிகள், 204 ஒருநாள் போட்டிகள் மற்றும் 68 டி20 போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்று அனைத்து வடிவப் போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 355 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அவர் 2005, 2009, 2013, 2017 மற்றும் 2022 ஆகிய ஐந்து ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
மகளிர் உலகக் கோப்பைப் போட்டியின் வரலாற்றில் அதிக விக்கெட்களை வீழ்த்திய முன்னணி வீராங்கனையாக இவர் திகழ்கிறார்.
மகளிர் கிரிக்கெட் போட்டியின் ஒருநாள் போட்டிகளில் 250க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.