TNPSC Thervupettagam
March 8 , 2024 133 days 151 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) பொது மின்னேற்ற முனையங்களைப் பயன்படுத்தி தங்கள் சாதனங்களை மின்னேற்றம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தி கைபேசி பயனர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.
  • "ஜூஸ் ஜாக்கிங்" (பொதுப் பயன்பாட்டு மின்னேற்றிகளில் தீம் பொருளினை நிறுவி தரவுகளைத் திருடுதல்) எனப்படும் இணைய வெளி தாக்குதலால் ஏற்படும் பாதுகாப்பு அபாயங்கள் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கை வெளி வந்துள்ளது.
  • இணைய வெளி தாக்குதலின் ஒரு வகையான ஜூஸ் ஜாக்கிங் என்பதில் ஹேக்கர்கள் (கணினிக் கொந்தர்கள்) பொதுப் பயன்பாட்டு USB மின்னேற்றி முனையங்களைப் பயன்படுத்தி ஊடுருவுகின்றனர்.
  • அவை தீநிரல் மூலம் அவற்றைத் தாக்குகின்றன அல்லது அவற்றுடன் இணைக்கப்பட்ட சாதனங்களிலிருந்து தரவைத் திருட அனுமதிக்கும் வன்பொருள் மாற்றங்களைச் செய்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்