- பாரத ஸ்டேட் வங்கியானது கைபேசிகளை மின்னேற்றம் செய்யும் நிலையங்களில் மின்னேற்றம் செய்ய வேண்டாம் என்று வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.
- தீம்பொருள்கள் வாடிக்கையாளர்களது கைபேசிகளை பாதிக்கக்கூடும் என்பதால் மின்னேற்ற நிலையங்களில் தங்களது கைபேசிகளை மின்னேற்றம் செய்வதற்கு முன் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்திக்க வேண்டும் என்று அந்த வங்கி அறிவுறுத்தி உள்ளது. இந்தத் தீம்போருள்கள் வாடிக்கையாளர்களின் முக்கியமானத் தரவுகள் மற்றும் கடவுச்சொற்கள் ஆகிய அனைத்தையும் திருடிக் கொள்ளும்.
ஜூஸ் ஜாக்கிங் என்றால் என்ன?
- நுண்ணறிவுக் கணினி ஊடுருவிகள் மின்னேற்ற நிலையங்களுடன் இணைக்கக்கூடிய வகையில் பாதிப்பை ஏற்படுத்தாத மற்றும் இன்னும் அதிநவீன யூஎஸ்பி போர்ட் (அகிலத் தொடர் பட்டை) போன்ற சாதனத்தை உருவாக்கியுள்ளனர் என்று கூறப்படுகின்றது.
- வாடிக்கையாளர் தனது தொலைபேசியை மின்னேற்றும் நிலையத்தில் உள்ள மின்னேற்றியில் செருகியவுடன், இந்தச் சாதனமானது கைபேசிப் பாதுகாப்பை மீறி அதில் தீம்பொருளை புகுத்தும். இந்தத் தீம்பொருளானது வாடிக்கையாளரின் தொடர்பு விவரங்கள், மின்னஞ்சல்கள், செய்திகள், புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் முக்கியமான நிதியியல் விவரங்கள் உள்ளிட்ட கைபேசியின் முழு உள்ளடக்கங்களையும் திருடி தன்னிடம் சேகரித்து வைத்துக் கொள்ளும்.