32வது அரபு கூட்டமைப்பு உச்சி மாநாடானது, சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நிறைவடைந்தது.
பிராந்தியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரபு நாடுகளின் ஒற்றுமைக்கு அழைப்பு விடுக்கும் ஜெட்டா பிரகடனம் இந்த மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
பிராந்தியத்தின் உறுதித் தன்மைக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக, பாலஸ்தீனிய பிரச்சினையில் அரபு நாடுகளின் நடுநிலைமையை இது மீண்டும் உறுதிப்படுத்தியது.
அரபு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை நிறுத்த வேண்டும் என்று இதில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், அரச நிறுவனங்களின் வரம்பிற்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் ஆயுதக் குழுக்கள் மற்றும் போராளிகளின் குழுக்களுக்கான அனைத்துவித ஆதரவையும் திட்ட வட்டமாக நிராகரிக்க வேண்டும் என்று இதில் வலியுறுத்தப்பட்டது.