அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் உலகின் முதலாவது “உயிருள்ள இயந்திரங்களை” உருவாக்கியுள்ளனர்.
இவை ஆப்பிரிக்காவில் காணப்படும் வளை நகம் கொண்ட தவளையின் (ஜெனோபஸ் லேவிஸ்) உயிரணுக்களிலிருந்து வடிவமைக்கப்பட்ட, தானாகவே நகரும் திறன் கொண்ட சிறிய ரோபோக்களாகும்.
நைஜீரியா மற்றும் சூடான் ஆகிய நாடுகள் முதல் தென்னாப்பிரிக்கா வரையிலான துணைநிலை சஹாரா பகுதிகள் முழுவதும் காணப்படுகின்ற “ஜெனோபோட்ஸ்” என்றழைக்கப் படுகின்ற நீர்வாழ் தவளை இனங்களின் காரணமாக, மில்லிமீட்டர் அகலம் கொண்ட இந்த ரோபோக்களுக்கு இவ்வாறு பெயரிட்டுள்ளனர்.
ஜெனோபோட்டுகளானவை கொண்டு செல்ல வேண்டியப் பொருட்களை எடுத்துக் கொண்டு இலக்கை நோக்கி நகர்கின்றது (ஒரு நோயாளிக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டுச் செல்ல வேண்டிய மருந்து போன்றது). இலக்கை அடைந்த பின்னர் அவை விடுவிக்கப்பட்டு அவை கொண்டு சென்ற மருந்து நோயாளியைக் குணப்படுத்துகின்றது.