TNPSC Thervupettagam

ஜெமினிட்ஸ் விண்கற்கள் பொழிவு

December 20 , 2020 1347 days 551 0
  • இது இந்த ஆண்டின் வலிமையானதாகக் கருதப் படுகின்றது.
  • இதனுடைய தோற்றம் ஒரு வால் நட்சத்திரத்தில் இருந்து ஆரம்பிக்காத  காரணத்தினால் இது தனித்துவம் மிக்கதாகக் காணப்படுகின்றது.
  • இதன் தோற்றம் குறுங்கோள் அல்லது அழிந்து போன வால் நட்சத்திரமான 3200 பேத்தோன் ஆக இருக்கலாம் என்று நம்பப் படுகின்றது.
  • ஜெமினிட்ஸ்க்குப் பிறகு, வடதுருவ அரைக் கோளத்தில் உள்ள பார்வையாளர்கள் அர்சிட்ஸ் (Ursids) என்ற விண்கற்கள் பொழிவைப் பார்க்க முடியும்.
  • எனினும், அர்சிட்ஸின் விகிதமானது ஜெமினிட்ஸின் விகிதத்தை விடக் குறைவானது ஆகும்.
  • விண் வீழ்கற்கள் என்பவை சூரியனைச் சுற்றி வரும் வகையில் தன்னுடைய சுற்று வட்டப் பாதையில் நிலையாகச் சுற்றி வரும் வால் நட்சத்திரத்திலிருந்துப் பிரிந்த ஒரு வகை  பாறை மற்றும் பனித் துண்டுகளாகும்.
  • வீண் வீழ்கற்கள் பொழிவை ஒரு வால் நட்சத்திரம் அல்லது குறுங்கோள் தனக்குப் பின்னால் விட்டுச் சென்ற கழிவுப் பொருட்களை பூமி கடக்கும் போது காண முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்