ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருதுகள் மற்றும் இதர விருதுகள்
March 5 , 2021 1420 days 721 0
புகழ்பெற்ற திரைப்பட நடிகர்/நடிகைகளான B. சரோஜா தேவி மற்றும் சௌகார் ஜானகி, புகழ்பெற்ற பின்னணிப் பாடகர்களான P. சுசிலா மற்றும் ஜமுனா ராணி மற்றும் பரதநாட்டியக் கலைஞர்களான அம்பிகா காமேஸ்வர் மற்றும் பார்வதி ரவி கந்தாசாலா ஆகியோர் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டிற்கான புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா சிறப்பு விருதுகளுக்காகத் தமிழகஅரசினால் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளனர்.
புகழ்பெற்ற கலைஞர்களான வாணி ஜெயராம் மற்றும் S. ராஜேஸ்வரி ஆகியோர் முறையே 2019 மற்றும் 2020 ஆண்டுகளுக்கான அகில இந்திய எம்.எஸ். சுப்புலட்சுமி விருதுக்கு (இசை) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும் புகழ்மிக்க கலைஞர்களான அலர்மேல் வள்ளி மற்றும் சந்திரா தண்டாயுத பாணி ஆகியோரும் 2019 ஆம் ஆண்டின் அகில இந்திய விருதான பாலசரஸ்வதி (நாடகம்) விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 59 ஆளுமைகள் 2019 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருதுகளைப் பெறுவதற்காகவும் 65 ஆளுமைகள் 2020 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருதுகளைப் பெறுவதற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
“அக்கரை சகோதரிகள்”, எஸ். சுப்புலட்சுமி மற்றும் எஸ். சுவர்ணலதா, கலைஞரான அச்சல்புரம் எஸ். ராமராஜன், யோகி பாபு மற்றும் தேவதர்ஷினி, சினிமா தயாரிப்பாளரான கலைப்புலி எஸ். தாணு, திரைப்படத் தொகுப்பாளரான ஆண்ட்டனி மற்றும் பாரதிய வித்யா பவனின் K.N. ராமசாமி ஆகியோர் 2019 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இசை இயக்குநரான D. இமான் மற்றும் திரைப்பட இயக்குநரான கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் 2020 ஆம் ஆண்டிற்கான விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பொள்ளாட்சி தமிழ் இசைச் சங்கம் மற்றும் மதுரையில் ராஜா முத்தையா மன்றத்தில் உள்ள தமிழ் இசைச் சங்கம் ஆகியவை சிறந்த கலாச்சார அமைப்புகளுக்கான கேடயங்களைப் பெற இருக்கின்றன.
திருவண்ணாமலையில் உள்ள சபரி நாடகக் குழுவானது சிறந்த நாடகக் குழுவிற்காக சுழல் கேடயத்தைப் பெற இருக்கின்றது.