இந்திய அரசானது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக ஜெயா ஜெட்லி பணிக் குழு என்ற ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பணிக் குழுவானது மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தினால் அமைக்கப் பட்டுள்ளது.
இந்தக் குழுவானது தாய்மார்கள் இறப்பு விகிதத்தை குறைத்தல், ஊட்டச்சத்து நிலைமைகளை மேம்படுத்துதல், வயது தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்தல் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய இருக்கின்றது.
மேலும் இந்தப் பணிக் குழுவானது பச்சிளங் குழந்தைகள் இறப்பு விகிதம், மொத்தக் கருத்தரிப்பு விகிதம், தாய்மார்கள் இறப்பு விகிதம், குழந்தைகள் பாலின விகிதம், பிறப்பின் போதான பாலின விகிதம் ஆகியவற்றுடன் சேர்த்து சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான இதரப் பிரச்சினைகள் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்ய இருக்கின்றது.