அபுதாபியைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான G42 நிறுவனத்தின் துணைப் பிரிவான இன்செப்ஷன் நிறுவனம் 'ஜெய்ஸ்' எனப்படும் உலகின் அதிநவீன அரபு மொழி மாதிரியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒரு இருமொழி அரபு-ஆங்கில மொழி மாதிரியான ஜெய்ஸ் என்பது உரை மற்றும் குறியீடு ஆகியவை தொடர்பான மிகப்பெரிய தரவுத் தொகுப்பு மீதான பயிற்சி அளிக்கப் பட்ட ஒரு மொழி மாதிரியாகும்.
கணினி வழி மொழிபெயர்ப்பு, உரைச் சுருக்கம் மற்றும் வினாவிற்கு விடையளித்தல் போன்ற பல்வேறு பணிகளுக்கு இது பயன்படுத்தப்படலாம்.
காண்டார் கேலக்சி எனப்படும் உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு மீத்திறன் கணினியின் மூலம் இதற்கு பயிற்சியளிக்கப் பட்டது.