TNPSC Thervupettagam

ஜெரானியம் மரக்கன்றுகள்

December 30 , 2019 1666 days 604 0
  • அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி ஆணையமானது (Council of Scientific and Industrial Research - CSIR) ஜெரானியம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்ய  புதிய மற்றும் குறைந்த செலவிலான ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
  • தற்போது காற்றோட்டமான கண்ணாடி அமைப்பில் ஜெரானியம் சாகுபடி செய்யப் படுகின்றது.
  • புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன், மற்ற பயிர்களைப் போலவே பண்ணை போன்ற இடங்களிலும் இந்த ஜெரானியத்தினைப் பயிரிட முடியும்.
  • ஜெரானியம் ஒரு அழற்சி எதிர்ப்பு மற்றும் நோய்த்தொற்று எதிர்ப்புப் பொருளாகச் செயல்படுகின்றது.
  • ஜெரானியம் தாவரமானது முதன் முதலில் தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டது. இது முக்கியமாக அத்தியாவசிய எண்ணெய்ப் பொருள்களை உற்பத்தி செய்யப் பயன்படுகின்றது.
  • நவம்பர் மாதமானது ஜெரானியத்திற்கான சிறந்த விதைப்புப் பருவமாகும்.
  • இந்த தாவரமானது இந்தியாவில் இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் வடகிழக்குப் பிராந்தியங்களில் பயிரிடப்படுகின்றது.
  • இது பல மருத்துவ மதிப்புகளைக் கொண்டுள்ளது.
  • நறுமணப் பயிர்கள் மற்றும் மருத்துவத் தாவரங்களின் சாகுபடியை அதிகரிப்பதற்காகத் தொடங்கப்பட்ட அரோமா திட்டத்தின் கீழ் இது சாகுபடி செய்யப் படுகின்றது.
  • இந்தத் திட்டத்தில் ரோஸ்மேரி, லாவெண்டர் மற்றும் எலுமிச்சைப் புல் ஆகிய சாகுபடிப் பயிர்களும் அடங்கும்.
  • இந்தத் திட்டமானது இத்தகுப் பயிர்களை பயிரிடப்படாத மற்றும் தரிசு நிலங்களில் சாகுபடி செய்ய ஊக்குவிக்கின்றது.
  • வறட்சி, உப்புத்தன்மை, நீர்ப் பற்றாக்குறை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலங்களும் இந்தத் திட்டத்தில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்