TNPSC Thervupettagam

ஜெருசலேம் – அமெரிக்கா – ஐ.நா.பொது அவை

December 25 , 2017 2560 days 871 0
  • ஜெருசலமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அங்கீகரித்ததனை பயனற்ற செல்லாத வெற்றாக (Null and void)  அறிவிப்பதற்கான தீர்மானம் ஐ.நா.வின் பொது அவையில் பெரும்பான்மை ஆதரவோடு  நிறைவேற்றப்பட்டது.
  • 172 நாடுகளில் மூன்றில் இரு பங்கு அதாவது இந்தியா உட்பட 128 நாடுகள் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. ஒன்பது நாடுகள் (வீட்டோ) மறுப்பை தெரிவித்தன. 35 நாடுகள் வாக்குச் செயல்முறையில் இருந்து விலகி நின்றன.
  • ஐ.நா பாதுகாப்பு அவையில் 4 நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் 10 தற்காலிக உறுப்பினர்கள் என 14 உறுப்பு நாடுகளும் அமெரிக்காவின் இத்தகு அங்கீகாரத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுகையில் இத்தீர்மானத்தினை அமெரிக்கா தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறுத்தியது.
  • அதனைத் தொடர்ந்து அமெரிக்காவை எதிர்த்து ஓர் வரைவுத் தீர்மானம் ஐ.நா.பொது அவையில் துருக்கி மற்றும் யேமனால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிரச்சனைக்குரிய தொன்மை வாய்ந்த ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்து டெல் அவிவில் உள்ள தற்போதைய அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமிற்கு மாற்றுவதற்கு உத்தரவிட்டதனை தொடர்ந்து ஐ.நா.பொது அவையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்