ஜெர்மனி – டென்மார்க் சாலை மற்றும் ரயில் வழி சுரங்கப்பாதை
January 4 , 2019 2154 days 642 0
சுற்றுச்சூழல் பாதிப்பு சம்பந்தப்பட்ட எதிர்ப்புகள் உள்ள போதிலும் ஜெர்மனி மற்றும் டென்மார்க்கை இணைக்கும் இரயில் மற்றும் சாலை சுரங்கப் பாதைக்கு ஜெர்மானிய அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் பகுதியளவில் நிதியுதவி அளிக்கப்படுகிறது.
19 கி.மீ. நீளமுடைய இந்த பெஹ்மார்ன்பெல்ட் இணைப்பானது டென்மார்க்கின் லோலாண்ட் தீவையும் ஜெர்மனியின் பெஹ்மார்ன் தீவையும் இணைக்கின்றது. இதன் பணிகள் 2024-ல் நிறைவடைய உள்ளது.
இதன் பணிகள் நிறைவடைந்தால் இதுவே உலகின் மிக நீளமான சாலை மற்றும் இரயில் வழி சுரங்கப் பாதையாக இருக்கும்.