TNPSC Thervupettagam

ஜேக்கப் ஜுமா - சிறைத் தண்டனை

July 6 , 2021 1110 days 577 0
  • சமீபத்தில் ஊழல் விசாரணையில் ஆஜராகத் தவறியதால் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமாவிற்கு 15 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து தென் ஆப்பிரிக்காவின் உயரிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • இதன் பிறகு, இந்த தண்டனையானது அதிகப்படியானது மற்றும் நியாயமற்றது என்றும் சிறையில் கோவிட்-19 தொற்று ஏற்பட்டால் தனது உயிரை அது பறித்து விடும் என்றும் கூறி தனது 15 மாத சிறைத் தண்டனையை ரத்து செய்யுமாறு ஜேக்கப் ஜுமா நீதிமன்றத்திடம் கோரிக்கை ஒன்றை வைத்தார்.
  • இவருக்கு அளிக்கப்பட்ட அந்த 15 மாத சிறைத் தண்டனைக்கு எதிரான இவரது மனுவை விசாரிக்க அந்நாட்டின் மூத்த நீதிபதிகள் ஒத்துக் கொண்டுள்ளதால் அவர் தற்போது உடனடி சிறைத் தண்டனையிலிருந்து ஒரு தற்காலிக நிவாரணத்தைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்