TNPSC Thervupettagam

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி ஆய்வுக் கலம்

December 27 , 2021 973 days 684 0
  • "ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி ஆய்வுக் கலம்" என்று பெயரிடப்பட்ட ஒரு அடுத்தத் தலைமுறைத் தொழில்நுட்பத்தை சார்ந்த ஒரு விண்வெளி தொலைநோக்கி ஆய்வுக் கலத்தினை நாசா விண்ணில் ஏவ உள்ளது.
  • ஏரியன்ஸ்பேஸ் மூலம் இயக்கப்படும் ஏரியன் 5 ராக்கெட்டின் மூலம் இது விண்ணில் ஏவப்படும்.
  • இதனை நாசா, கனடாவின் விண்வெளி நிறுவனம் (CSA) மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.
  • நாசாவின் முதன்மையான வானியற்பியல் ஆய்வுப் பணியாக, இது ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி ஆய்வுப் பணியை வெற்றி கொள்ளும் வகையில்  திட்டமிடப் பட்டுள்ளது.
  • ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி ஆய்வுப் பணியுடன்  ஒப்பிடும் போது, இது மேம்படுத்தப்பட்ட அகச்சிவப்பு தெளிவுத் திறன்  மற்றும் உணர்திறனை வழங்கும்.
  • இது 256வது ஏரியன் ஆய்வுப் பணியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்