TNPSC Thervupettagam

ஜோஜிலா சுரங்கம்

January 5 , 2018 2388 days 789 0
  • ஸ்ரீநகர், கார்கில் மற்றும் லே ஆகிய பகுதிகளுக்கிடையே ஆண்டு முழுவதும் போக்குவரத்து இணைப்பை வழங்குவதற்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் ஜோஜிலா சுரங்கப்பாதை (Zojila Tunnel) திட்டத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய கேபினேட் ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • 15 கி.மீ. நீளமுள்ள இருதிசை இரு வழித்தடமுடைய (Two lane-Bidirectional) ஒற்றை சுரங்கப் பாதையோடு, அதற்கு இணையாக 14.2 கி.மீ நீளமுடைய வெளியேறும் சாலையுடைய சுரங்கமும் இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட உள்ளது.
  • ஜோஜிலா சுரங்கப் பாதை முடிவுற்றால் இதுதான் ஆசியாவின் நீளமான இருதிசைப் போக்குவரத்துச் சுரங்கப் பாதையாகும்.
  • மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தால் தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கூட்டுறவு நிறுவனத்தின் மூலம் (National Highway & Infrastructure Development Corporation limited) இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்