September 11 , 2024
73 days
100
- பெருஞ்சிலந்தி வகை (டரான்டுலா) சேர்ந்தப் பூச்சி ஒன்று ஜோம்பி பூஞ்சையால் பாதிக்கப் பட்டுள்ளதை ஆராய்ச்சியாளர் கண்டறிந்துள்ளனர்.
- பொதுவாக எறும்புகளை நன்கு குறி வைக்கும் இந்தப் பூஞ்சை ஆனது டரான்டுலா இனங்களைப் பாதித்ததற்கான முதல் பதிவினைக் குறிக்கிறது.
- ஓபியோகார்டிசெப்ஸ் யுனிலேடெரலிஸ் ஆனது பொதுவாக "கார்டிசெப்ஸ்" என்று குறிப்பிடப் படுகிறது.
- இந்த ஒட்டுண்ணியானது பூஞ்சை பூச்சிகளை, குறிப்பாக எறும்புகளைப் பாதிக்கிறது.
- ஜோம்பி பூஞ்சையானது, அதனைக் கொண்டுள்ள உயிரினத்தின் நடத்தையை நன்கு கட்டுப்படுத்தும் திறனுக்காக குறிப்பிடத் தக்கதாக உள்ளது.
- இது குறிப்பாக பூஞ்சையின் உயிர்வாழ்வையும் பரவலையும் மேம்படுத்தும் சூழலை நாடுவதற்கு எறும்புகளை தூண்டுகிறது.
- அதன் பெயர் இவ்வாறு இருந்தாலும், இது மனிதர்களைப் பாதிக்காது.
- இந்தப் பூஞ்சையானது மிக முக்கியமாக வெப்பமண்டலக் காடுகளின் சுற்றுச்சூழல் அமைப்புகளில் காணப்படுகிறது.
Post Views:
100