ஜோயமாலா என்ற யானையைப் பாதுகாப்புக் காவலில் வைக்கக் கோரி, அசாம் அரசு கௌகாத்தி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
ஜோயமாலா என்பது தமிழக அரசிற்கு குத்தகைக்கு வழங்கிய கோயில் யானை ஆகும்.
அசாமில் இருந்து கொண்டு வந்த யானைகளைத் தமிழக அரசு திருப்பி அனுப்ப மறுத்தது.
ஜோயமாலா யானையானது தமிழகத்தில் உள்ள ஒரு கோவிலில் கொடுமைப் படுத்தப் படுவதாக விலங்குகள் உரிமை தொடர்பான ஒரு குழுவான PETA தெரிவித்ததைத் தொடர்ந்து இந்தச் சர்ச்சையானது தொடங்கியது.
ஜோயமாலா உட்பட ஒன்பது யானைகளைத் தமிழகத்திற்குக் குத்தகைக்கு விட்டதாக அசாம் அரசு கூறுகிறது.