புகழ்பெற்ற பெங்காளி கவிஞரான ஜோய் கோஷ்வாமிக்கு 2017ஆம் ஆண்டிற்கான 31வது மூர்த்திதேவி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
இவ்விருதினை பெறும் முதல் பெங்காலி கவிஞர் இவரேயாவார்.
அனந்த புரஸ்கார், கேந்திரியா மற்றும் வங்காள சாகித்ய அகாடமி விருதுகளைப் பெற்றுள்ள இவர் முதல் டாட்டா வாழும் இலக்கிய கவிஞர் விருதையும் பெற்றுள்ளார்.
தன் செல்ல வளர்ப்பு பூனை உட்பட தன் வாழ்வின் நெருக்கமானவர்களை பாத்திரமாக்கி இவர் படைத்த வாழ்க்கை சுயசரிதையான “டு டோன்டோ போவாரா மாட்ரோ“ எனும் கவிதை தொகுப்பிற்காக கோஷ்ஸ்வாமிக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
மூர்த்தி தேவி விருது
வாழ்வை ஆட்கொள்ளும் சிந்தனைகள் மற்றும் பகுத்தறிவு கொண்ட இலக்கிய வேலைப்பாடுகளை (Contemplative and Perceptive work) படைக்கும் ஆசிரியர்களுக்கு இலக்கியம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான பாரதீய ஞானபீட அமைப்பால் ஆண்டுதோறும் வழங்கப்படும் உயரிய இலக்கிய விருதே மூர்த்தி தேவி விருதாகும்.
இந்திய மொழிகளில் எழுதும் இந்திய இலக்கியவாதிகளுக்கு அவர்களின் சிறந்த படைப்பிற்காக இவ்விருது வழங்கப் பெறுகிறது.
பட்டாமாஹாதேவி சாந்தாலா தேவி எனும் நாவலுக்காக கன்னட எழுத்தாளரான C.K.நாகராஜராவிற்கு முதன் முதலாக 1983ல் இவ்விருது வழங்கப்பட்டது.
சரஸ்வதி சிலையும், சான்றுப் பதக்கமும், 4 லட்ச ரூபாய் ரொக்கமும் இவ்விருதில் வழங்கப் பெறும்.