TNPSC Thervupettagam
February 21 , 2024 310 days 1188 0
  • உருது மொழிக் கவிஞரும் பாலிவுட் எழுத்தாளரும் இயக்குனருமான குல்சார் மற்றும் சமஸ்கிருத அறிஞர் ஜகத்குரு இராமபத்ராச்சார்யா ஆகியோர் 2023 ஆம் ஆண்டு ஞானபீட விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • குல்சார் அல்லது சம்பூரன் சிங் கல்ரா அவரது தலைமுறையின் சிறந்த உருது கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படுவதோடு, அவர் இந்தி மொழி திரைத் துறையின் சிறந்த இயக்குனர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.
  • இராமபத்ராச்சார்யா, புகழ்பெற்ற இந்து ஆன்மீகத் தலைவர், கல்வியாளர் மற்றும் நான்கு இதிகாசங்கள் உட்பட 240க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் நூல்களை எழுதியவர் ஆவார்.
  • இவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சித்ரகூடில் அமைந்த துளசி பீடத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார்.
  • 2002 ஆம் ஆண்டில் உருது மொழிக்கான சாகித்ய அகாடமி விருதையும், 2013 ஆம் ஆண்டில் தாதாசாகேப் பால்கே விருதையும், 2004 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருதையும் குல்சார் பெற்றுள்ளார்.
  • அவர் தனது படைப்பிற்காக குறைந்தது ஐந்து தேசிய திரைப்பட விருதுகளை வென்று உள்ளார்.
  • இந்த ஆண்டு விருதானது 1965 ஆம் ஆண்டு முதல் இந்திய இலக்கியத்திற்கான சிறந்த பங்களிப்புகளுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் ஞானபீட விருதின் 58வது பதிப்பு ஆகும்.
  • இந்த விருதானது 1944 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பாரதிய ஞானபீட அமைப்பினால் வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்