TNPSC Thervupettagam
November 4 , 2017 2579 days 1222 0
  • இந்திய இலக்கியத்திற்கு செழுமையான பங்களிப்பு அளித்தமைக்காக புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர் சோப்தி, (92) 2017-ம் ஆண்டிற்கான 53-வது ஞான பீட விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • ஒட்டு மொத்தமாக இந்த பெருமைமிகு விருதைப் பெறும் எட்டாவது பெண்மணி இவர் ஆவார்.
  • எழுத்துலகில் புதிய நடைகளைப் புகுத்தியமைக்காகவும், தமது படைப்புகளில் தைரியமான கதாபாத்திரங்களை உருவாக்கியமைக்காகவும் அறியப்படும் கிருஷ்ணா சோப்தி, 1925-ம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குஜராத் என்ற நகரில் பிறந்தார்.
  • இவரது மொழிநடை இந்தி, உருது மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிக் கலவைகளினால் வெகுவாக தாக்கம் பெற்றுள்ளது.
  • இந்தி அகாடமி விருதுகள், சிரோமன் விருதுகள், மைதிலி சரண் குப்த் விருது, சாகித்ய அகாடமி விருது மற்றும் பத்மபூஷன் போன்ற பல்வேறு சிறப்பு வாய்ந்த விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
ஞான பீட விருது
  • ஞானபீட விருது இந்தியாவின் உயரிய இலக்கிய விருது ஆகும்.
  • அறிவின் இருக்கையில் என்ற பொருளில் சமஸ்கிருத மொழியில் இருந்து ஞான மற்றும் பீடம் என்ற வார்த்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற பத்திரிக்கைக் குழுமத்தை சொந்தமாகக் கொண்டிருக்கும் சாஹீ சாந்தி பிரசாத் ஜெயின் குடும்பத்தாரால் அமைக்கப்பட்ட பாரதீய ஞான பீட அறக்கட்டளை மூலம் 1961-ம் ஆண்டிலிருந்து இந்த விருது வழங்கப்படுகிறது.
  • இந்த விருது 11 லட்ச ரூபாய் பரிசுத் தொகை, பாராட்டுப் பத்திரம் மற்றும் வெண்கலத்தாலான சரஸ்வதி சிலை ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்