மத்திய சுரங்க அமைச்சகம் ஆனது, அரிட்டாப்பட்டியில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் கனிமத் தொகுதி குறித்த மறு மதிப்பு ஆய்வினை மேற்கொள்ளுமாறு இந்தியப் புவியியல் ஆய்வு மையத்திடம் (GSI) கோரி உள்ளது.
கனிம சுரங்கத் தொகுதியில் இருந்து மாநிலத்தின் முதல் உயிரியல் பன்முகத்தன்மை மிகுந்த தளத்தை விலக்கி அதன் எல்லையை மறுவரையறை செய்வதற்கான பெரும் சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு அது கோரியுள்ளது.
அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள மலைகளில், சுமார் 250 பறவை இனங்கள் காணப் படுவதால், அவை உயிரியல் மற்றும் வரலாற்று ரீதியிலான பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை யாகும்.
இதில் – வெள்ளை வல்லூறு (பால்கோ ஜக்கர்), இராசாளிக் கழுகு (பால்கோ பெரெக்ரைன்ஸ்), மற்றும் இராசாளி பருந்து (அக்விலா ஃபேசியாட்டா) ஆகிய 3 முக்கிய வேட்டையாடும் பறவை இனங்களும் அடங்கும்
இந்தக் கிராமத்தில் பல்வேறு மிகப்பெருங்கற்காலக் கட்டமைப்புகள், தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட கல்வெட்டுகள், சமணப் படுக்கைகள் மற்றும் 2200 ஆண்டுகள் பழமையான குடைவறைக் கோயில்கள் உள்ளன.