நாசா நிறுவனமானது, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ஏவுகலத்தினைப் பயன்படுத்தி டானேஜர்-1A என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது.
கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் ஆகியவற்றை மிக அதிகளவில் வெளியிடும் பகுதிகளை இந்த செயற்கைக்கோள் கண்டறியும்.
இந்த செயற்கைக்கோள் ஆனது, மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகிய வாயுக்களின் உமிழ்வினை நன்கு கண்காணிக்க வரைபடமாக்கல் நிறமாலை அளவி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும்.
மீத்தேன் ஒரு கண்ணுக்குத் தெரியாத ஆனால் தீவிரமான பசுமை இல்ல வாயுவாகும் என்பதோடு கார்பன் டை ஆக்சைடுக்கு அடுத்தபடியாகப் புவி வெப்பமடைதலுக்கு அதிகளவில் பங்காற்றும் இரண்டாவது வாயுவாகும்.
2022 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, நிலத்தில் காணப்படும் ஓசோனால் பாதிக்கப் படுவது ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஒரு மில்லியன் கணக்கிலான மிக முன்கூட்டிய மரணங்களுக்கு வழி வகுக்கும்.