TNPSC Thervupettagam
May 27 , 2019 1883 days 595 0
  • தேசிய மக்கள் கட்சியின் டபுக் டாகு அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள கிழக்கு செப்பா சட்டமன்றத் தொகுதியில் தனது போட்டியாளரான பிஜேபியைச் சேர்ந்த வேட்பாளரை மிகவும் குறுகிய வித்தியாசமான 29 வாக்குகளில் தோற்கடித்துள்ளார்.
  • அவர் பிஜேபியின் ஈலிஸ் டல்லாங் என்பவருக்கு எதிராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
  • தபால் வாக்குகளிடமிருந்துப் பெற்ற இறுதி எண்ணிக்கையானது அவரது வெற்றிக்குச் சாதகமாக எண்ணிக்கையைத் திசை திருப்பியது.
தபால் வாக்குமுறை
  • தேர்தல்களில் தபால் வாக்கு முறை என்பது வாக்காளர்களுக்கு மின்னணு ரீதியில் வாக்குச் சீட்டானது கொடுத்து அனுப்பப்பட்டு தபால் மூலம் திருப்பி அனுப்பப்படும் தபால் வாக்குச் சீட்டுகளைக் கொண்ட ஒரு வகையான வாக்கு முறையாகும்.
  • தபால் வாக்குமுறை என்பது வாக்குச் சீட்டுகள் எவ்வாறு சமர்ப்பிக்கப் படுகின்றன என்பதை மட்டுமே குறிப்பதன்றி எவ்வாறு வாக்குகள் எண்ணப்படுகின்றன என்ற முறையைக் குறிப்பதல்ல.
  • இந்தியத் தேர்தல் ஆணையத்தின்படி தபால் வாக்கு வசதி அரசு சேவைத் துறையில் உள்ள வாக்காளருக்கு கிடைக்கும் வசதியாகும். அதாவது ஒரு வாக்காளர் சேவைத் துறைத் தகுதியைக் கொண்டிருப்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்