TNPSC Thervupettagam

டாக்டர் திருதி பானர்ஜி – இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் புதிய இயக்குநர்

August 8 , 2021 1083 days 445 0
  • இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் புதிய இயக்குநராக டாக்டர் திருதி பானர்ஜி அவர்களை நியமிப்பதற்கு இந்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • எனவே, கடந்த 100 ஆண்டுகளில் முதல்முறையாக இந்திய விலங்கியல் ஆய்வு மையத்திற்கு ஒரு பெண் இயக்குநர் நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இந்திய விலங்கியல் ஆய்வு மையமானது 1916 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நிறுவப் பட்டது.
  • இதன் தலைமையகம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது.
  • இது 16 பிராந்திய மையங்களைக் கொண்டுள்ளது.
  • இது சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.
  • இந்திய விலங்கியல் ஆய்வு மையமானது 1949 ஆம் ஆண்டு முதல் பெண் அறிவியலாளர்களைப் பணியமர்த்த தொடங்கியது.
  • இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் முதல் பெண் ஊழியர் மீரா மன்சுகானி (Mira Mansukhani) என்பவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்