TNPSC Thervupettagam
October 23 , 2022 638 days 368 0
  • டாக்டர் திலீப் மஹலனோபிஸ் சமீபத்தில் காலமானார்.
  • 1971 ஆம் ஆண்டு வங்காளதேச விடுதலைப் போரின் போது, நிரம்பி வழியும் அகதிகள் முகாம்களில் அவர் ORS என்ற குடிநீரை அறிமுகம் செய்து பலருக்குத் தனது சேவையை வழங்கி வந்தார்.
  • அந்த காலக் கட்டத்தில் அங்குப் பரவலாக பரவி வந்த காலரா மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற நோய்கள் அவரை ORS என்ற குடிநீரைக் கண்டுபிடிப்பதற்கு வழி வகுத்தது.
  • அவரது இந்தச் சிறப்பு மருந்தானது "20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான மருத்துவக் கண்டுபிடிப்பு" என்று தி லான்செட் அமைப்பினால் அழைக்கப்படுகிறது.
  • 2002 ஆம் ஆண்டில், டாக்டர் திலீப் மஹாலனாபிஸ் மற்றும் டாக்டர் நதானியேல் எஃப் பியர்ஸ் ஆகியோர் வாய்வழி நீர்ச்சத்து இழப்பீட்டினை ஈடு செய்தல் சிகிச்சையைக் கண்டுபிடித்துச் செயல்படுத்தியதற்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தினால் வழங்கப் பட்ட பொலின் பரிசினைப் பெற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்