டாக்டர் A.P.J. அப்துல்கலாம் பிறந்த நாள் ஆண்டு விழா – அக்டோபர் 15
October 18 , 2017 2643 days 757 0
டாக்டர் அப்துல்கலாமின் பிறந்த நாள் ஆண்டு விழாவை முன்னிட்டு ராமேஸ்வரத்திலிருந்து “டாக்டர் கலாம் சந்தேஷ் வாகினி விஷன் 2020” என்ற பேருந்து மூலம் குழந்தைகள் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று ஜனாதிபதியை சந்தித்தனர்.
கலாம் சந்தோஷ் வாகினியானது கலாம் நினைவு இல்லத்தாலும் சின்மயா பல்கலைக்கழகத்தாலும் சேர்ந்து ஆரம்பிக்கப்பட்டது.
இந்த வாகினியானது மக்களுக்கு விழிப்புணர்வையும் கல்வியறிவையும் பரப்பும் பொருட்டு, கலாமின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளையும் இந்தியாவின் முக்கிய அறிவியல் சாதனைகளையும் சித்தரிக்கிறது.