டாடா குழுமத்தின் ஒருங்கிணைந்தச் சந்தை மூலதனம் ஆனது 30 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி உயர்ந்து, இந்திய வணிகத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் குறித்துள்ளது.
டாடா ஆலோசனை வழங்கீட்டு குழுமத்தின் பங்குகள் 4 சதவிகிதம் உயர்ந்து 15 லட்சம் கோடி ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் இணையதளத்தின் படி, குறைந்தது எட்டு நிறுவனங்களின் சந்தை மூலதனத்தின் மதிப்பு ஆனது 6 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் அதிகபட்சமாக அதன் சந்தை மூலதன மதிப்பை 19.32 லட்சம் கோடி ரூபாயாகக் கொண்டுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து டாடா ஆலோசனை வழங்கீட்டுக் குழுமம் (15.12 லட்சம் கோடி ரூபாய்) மற்றும் HDFC வங்கி (10.96 லட்சம் கோடி ரூபாய்) இடம் பெற்றுள்ளன.