TNPSC Thervupettagam

டாட்டா இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது - 2017

November 29 , 2017 2581 days 896 0
  • மும்பையில் நடைபெற்ற 18-வது டாட்டா இலக்கியத் திருவிழாவில் நாடகத் துறைக்கு மிகச் சிறந்த வகையில் பங்காற்றியமைக்காக நடிகர் மற்றும் கதை ஆசிரியரான கிரிஷ் கர்னாடிற்கு 2017-ஆம் ஆண்டிற்கான டாட்டா இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு உள்ளது.
  • இவர் ஞானபீட விருது, பத்ம பூஷன் விருது, மற்றும் பத்ம ஸ்ரீ விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
  • இவர் திரையில் அறிமுகமான ”சம்ஸ்காரா“ எனும் திரைப்படமானது குடியரசுத் தலைவரின் கோல்டன் லோட்டஸ் விருதை வென்ற முதல் கன்னட திரைப்படமாகும்.
  • நாடகங்கள் எழுதுவதில் இவர் பெரும் புகழ் பெற்றவர்.
  • வங்க எழுத்தாளரான நபநீத தேவ் சென்-னுக்கு Big little Book Award வழங்கப்பட்டுள்ளது.
  • புனை கதைகளுக்கான ஆண்டின் சிறந்த புத்தக விருது “Son of Thunder Cloud” எனும் நாவலுக்காக நாகாலாந்து எழுத்தாளரான ஈஸ்டெரின் கைர்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
  • Non-Fiction பிரிவில் பங்கஜ் மிஷ்ராவின் “Age of Anger – A History of the present” என்ற புத்தகத்திற்கு ஆண்டின் சிறந்த புத்தக விருது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்